இலங்கைக்கு சற்று முன் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 18, 2019

இலங்கைக்கு சற்று முன் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, பலத்த மின்னல் தாக்கம் இன்றும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், குருணாகலை, மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, கொழும்பு, நுவரெலியா, பதுளை, மொனராகலை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு;ள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலும், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் ஏனைய சில பிரதேசங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


மேற்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களிலும், மாத்தறையிலிருந்து திருகோணமலை வழியாக அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய கடற்பிரதேசங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்பங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு திடீரென 70 - 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

எனவே இந்த பிரதேசங்களில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு செல்வதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.