ஹூங்கம தெற்கு பட்டஹத்த பகுதியை சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவியை கடந்த 2 ஆம் திகதி முதல் காணவில்லை என மாணவியின் பெற்றோர் ஹூங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
விஜயபா தேசிய பாடசாலையில் 9 ஆம் ஆண்டில் பயிலும் இந்த மாணவி கடந்த 2 ஆம் திகதி வலைப்பந்தாட்ட பயிற்சிக்காக விளையாட்டு உடையில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சிறுமி பாடசாலைக்கு செல்லவில்லை எனவும் அன்றைய தினத்தில் இருந்து மகளை காணவில்லை என தாய் பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சிறுமி வேறு ஒரு வீட்டுக்கு சென்று ஆடைகளை மாற்றியதாக தகவல் கிடைத்துள்ளதுடன் பொலிஸார் அது சம்பந்தமாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி பற்றிய தகவல் அறிந்தால், ஹூங்கம பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0715991663 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்புக்கொண்டு சிறுமியின் தாயாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்