மயக்க மருந்து கொடுத்து 9 ஆம் வகுப்பு மாணவியை துஸ்பிரயோகப்படுத்திய 3 இளைஞர்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 7, 2019

மயக்க மருந்து கொடுத்து 9 ஆம் வகுப்பு மாணவியை துஸ்பிரயோகப்படுத்திய 3 இளைஞர்கள்!

தமிழகத்தின் புதுவை அருகே மயக்க மருந்து கொடுத்து 9 ஆம் வகுப்பு மாணவியை துஸ்பிரயோகப்படுத்திய 3 இளைஞர்களை பொலிஸார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் வைத்துள்ளனர்.

தமிழகத்தின் புதுவை அருகே உள்ள பகுதியான நாவற்குளம். என்ற ஊரைச் சேர்ந்த 15 வயது மாணவியும், அதே பகுதியை சேர்ந்த நரேஷ் (வயது 19) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களில் மாணவி கோரிமேட்டில் ஒரு பாடசாலையில் தரம் 9 இல் படித்து வருகிறார். நரேஷ் மதகடிப்பட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. மாணவி தனது காதலனை சந்திக்காமல் இருந்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் மாணவியிடம் மீண்டும் தன்னிடம் பேசுமாறு கூறினார். என்னிடம் பேசாவிட்டால் நாம் தனிமையில் சந்தித்து பேசியதை உன் பெற்றோரிடம் கூறுவேன் என்று மிரட்டியுள்ளார்.

மாணவியிடம் நேற்று காலையில் நரேஷ் பேசிய போது உன்னிடம் பேச வேண்டியுள்ளது. சேதராபட்டில் வானூர் விநாயக புரத்தை சேர்ந்த ராஜா (32) என்பவர் உள்ளார். அவர் எனது நண்பர் . அவரது வீட்டுக்கு செல்வோம் என்று அழைத்தார்.

இதனை நம்பி அந்த மாணவி காதலனுடன் ராஜா வீட்டுக்கு சென்றார். அங்கு சென்றதும் மாணவிக்கு நரேஷ் குளிர்பானம் குடிக்க கொடுத்தார். அதில் அவருக்கு தெரியாமல் மயக்க மருந்தை கலந்தார். இதனை அறியாத அந்த மாணவி காதலன் கொடுத்த குளிர்பானத்தை குடித்தார்.

குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் மாணவி மயக்கமடைந்து கீழே விழுந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாணவர் நரேஷ் அந்த மாணவியை பாலியல் துஸ்பிரயோத்திற்குற்படுத்தினார்.

மேலும் அவர் மொரட்டாண்டி கிராமத்தை சேர்ந்த தன் நண்பர் சூர்யா (21) என்பவரையும் அங்கு வருமாறு அழைத்த போது அங்கு சென்ற சூரியாவும் மாணவியை பாலியல் துஸ்பிரயோம் செய்தார். சிறிது நேரத்தில் ராஜாவும் அந்த மாணவியை துஸ்பிரயோப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் மகள் வீட்டில் இருந்து வெளியே சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் கவலை அடைந்து பின்னர் அவர்கள் இது குறித்து ஆரோவில் பொலிஸ் நிலையத்திவ் புகார் செய்தனர்.

அதன்பேரில் பொலிஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடத் தொடங்கினர்.



இரவு 8 மணியளவில் அந்த மாணவி உடல் சோர்ந்து தள்ளாடியபடி தன் வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டு இருந்ததைப் பார்த்ததும் பெற்றோர் அவளை தன் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

அப்போது அந்த மாணவி கதறி அழுதாள். பெற்றோர் ஏன் அழுகிறாய் என கேட்ட போது மாணவி தனக்கு ஏற்பட்ட கொடுமையை குறித்து கூறினார். இதைக் கேட்டதும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பொலிஸில் புகார் செய்யப்பட்டது. உடனே பொலிஸார் சேதாராப்பட்டு சென்று. அங்கு மது போதையில் இருந்த நரேஷ், அவரது நண்பர்கள் சூர்யா, ராஜா ஆகியோரை கைது செய்தனர்.. அப்போது நரேஷ் மாணவிக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து காதலன் நரேஷ், அவரது நண்பர்கள் சூர்யா, ராஜா ஆகியோரை கைது செய்தனர். கைதான 3 பேரையும் அன்றிரவே நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்திய போது . அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து கைதான 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட அந்த மாணவிக்கு இன்று அரசு வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.