கல்முனை பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சொட்கன் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி தோட்டாக்களை மீட்டுள்ளனர்.
இன்று காலை 7.30 மணி முதல் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை குடி கடற்கரை வீதி தொடக்கம் சாய்ந்தமருது வரையான பிரதேசங்களில் இராணுவம் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.