இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் தூப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது குழந்தை ஒன்று காப்பாற்றப்பட்டுள்ள புகைப்படம் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை கரைய வைத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அடுத்தடுத்து நடந்த வெடி குண்டு சம்பவத்தை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் கல்முனை பகுதியில் மர்ம கும்பலுடன் அதிரடிப் படையினர் நடந்த துப்பாக்கிச் சூடின் போது திடீரென்று குண்டு வெடித்ததால் அங்கிருந்த குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.
அது தொடர்பான வீடியோக்கள் இப்போது சமூகவவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் போது குழந்தை ஒன்று காப்பாற்றப்பட்டுள்ளது. அந்த குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு அதிகாரிகள் கொண்டு செல்லும் புகைப்படம் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை உருக வைத்துள்ளது.