குண்டுகளை தயாரிப்பதற்கு தீவிரவாதிகளுக்கு உதவிய முன்னாள் இராணுவ சிப்பாய்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 30, 2019

குண்டுகளை தயாரிப்பதற்கு தீவிரவாதிகளுக்கு உதவிய முன்னாள் இராணுவ சிப்பாய்?



தௌஹீத் ஜமாத் தீவிரவாதிகளுக்கு குண்டுகளை தயாரிப்பதற்கு முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் உதவியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும்,

குண்டுகளை தயாரிப்பதற்கான தொழிநுட்ப உதவிகளை குறித்த முன்னாள் இராணுவ சிப்பாய் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுர்தீன் மொஹமட் எனப்படும் ஆர்மி மொஹிதீன் என்ற நபரே இவ்வாறு குண்டுகளை தயாரிப்பதற்கு உதவியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குண்டுகளை தயாரிப்பதற்கு இராணுவச் சிப்பாய் உதவியதாக தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

ஆர்மி மொஹிதீன் என்பவர் குண்டு தயாரிப்பு தொடர்பில் நிபுணத்துவம் கொண்டவர் எனவும், இந்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் வெடிபொருட்களைக் கொண்டு குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது