லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்: மக்களின் இதயத்தில் கரைந்த நெகிழ்ச்சி நிகழ்வு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 1, 2019

லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்: மக்களின் இதயத்தில் கரைந்த நெகிழ்ச்சி நிகழ்வு

லண்டனில் உள்ள Pinner பகுதியில் கடந்த வாரம் குத்திக்கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் ரவியின் குடும்பத்திற்கு அப்பகுதி மக்கள் ஆன்லைன் மூலம் நிதி உதவி திரட்டிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

52 வயதான இலங்கை தமிழர் ரவியை கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.

கடின உழைப்பாளி, நேர்மையான மனிதர் மற்றும் மிகவும் அன்பானவர் என அப்பகுதி மக்களால் அறியப்பட்டவர் ரவி.

இவரின் மரணம் குடும்பத்தாரை மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் வடக்கு லண்டன் பகுதி முழுவதும் ஆன்லைன் வழியாக ரவிக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதில் இதுவரை £49,986 பவுண்ட் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் Caron Dias என்பவர் கூறியதாவது, எங்கள் வீட்டு வாசல் பகுதியில் நடந்த கொலை முற்றிலும் துயரமானது. லண்டனில் வன்முறை சம்பவங்கள் ஒரு தொற்றுநோய் போன்று இருப்பதை நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம்.

அப்படியிருக்கையில், எங்கள் வீட்டிற்கு அருகில் நடந்த இந்த சம்பவத்தை எங்களால் புறக்கணிக்க இயலாது. தற்போது நாங்கள் திரட்டி இருக்கும் நிதியின் மூலம் ரவியின் இறுதிசடங்கு செலவுகள் மற்றும் அவர் குடும்பத்திற்கான தற்போதைய செலவுகளுக்கு உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.