பிரான்சின் Brest நகரில் விஷ வாயு தாக்குதல்......40 பேர் மருத்துவமனையில் அனுமதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 1, 2019

பிரான்சின் Brest நகரில் விஷ வாயு தாக்குதல்......40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பிரான்சின் Brest நகரில் விஷ வாயு தாக்குதலுக்கு உள்ளாகியதால் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Brest நகரில் உள்ள எட்டு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென விஷ வாயு பரவியது. இதனால் கட்டிடத்திற்குள் இருந்த பலர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். மேலும் அவர்கள் மயக்கம் அடைந்ததால், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விஷ வாயு தாக்குதலால் மொத்தம் 45 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 40 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷ வாயு தாக்குதல் குறித்த விசாரணையில், கார்பன் மோனாக்சைடு எனும் வாயு பரவியதால் பலருக்கும் இந்த மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் தலைவலி, வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கும் ஆளானதாக கூறப்படுகிறது.