பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோ: நக்கீரன் கோபாலிடம் விசாரணை நிறைவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 1, 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோ: நக்கீரன் கோபாலிடம் விசாரணை நிறைவு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபாலிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறை தொடர்பாக நக்கீரன் தொடர்ந்து புதிய ஆதாரங்களை வெளியிட்டு வந்தது.

இதுதொடர்பாக நக்கீரன் மீது இரண்டு வழக்குகள் தொடரப்பட்டு, அந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக அரசு ஆணை பிறப்பித்தது.

கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நக்கீரன் கோபால், சிபிசிஐடி தலைமை அலுவலகம் சென்னையில் இருப்பதால், அங்கு தான் ஆஜராக அனுமதித்து உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை எலும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நக்கீரன் கோபாலிடம் சுமார் 4 மணி நேரமாக அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.