தற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, April 21, 2019

தற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு!

கொழும்பில் வெடிப்பு சம்பவத்தை ஏற்படுத்திய தற்கொலைதாரிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் வீடொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இன்று காலை கொழும்பில் குண்டு தாரிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்ககுதலில் இது வரை 207 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 400 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் வீடொன்று தற்போது பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த வீடு பாணாந்துறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்