2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மகிந்தவுடன் இணைந்து ரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளார்.
2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
ஆளும்கட்சி மற்றும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டு எதிர்க் கட்சியான மஹிந்த ஆதரவு அணியும் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்தன.
அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.