119 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 5, 2019

119 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றம்!

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாசிப்பின் வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தார்.

தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெற்றது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் குழு நிலை விவாதம் இன்று இடம்பெற்றிருந்த நிலையில் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.