இலங்கை மின்வெட்டிற்கு பின்னால் மறைந்திருக்கும் பல மர்மங்கள்.....திகைக்க வைக்கும் உண்மைகள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 5, 2019

இலங்கை மின்வெட்டிற்கு பின்னால் மறைந்திருக்கும் பல மர்மங்கள்.....திகைக்க வைக்கும் உண்மைகள்

மின்சார தடைக்கு பின்னணியில் செயல்படுவது மின்சார மாபியாக்காரர்களின் செயல்பாடுகளேயாகும். இதுபோல பல துறைகளில் மாபியாக்கள் நாட்டில் உள்ளனர். உதாரணத்துக்கு வைத்தியர் சங்கமான GMOA வைத்திய சங்கமும் மாபியா குழுவொன்றினால்தான் செயல்படுகிறது.

அதற்கு அடுத்தபடியான மாபியா குழு மின்சார மாபியாவாகும். இதன் காட் பாதர்களாக உள்ளவர்கள் மின்சார சபையில் உள்ள பொறியலாளர்கள் என்றால் திகைத்து போவீர்கள். மக்களின் வரிப் பணத்தில் இலவச கல்வியை பெற்று தொழில் புரியும் இவர்களே 2 கோடி மக்களை இருளில் தள்ளியுள்ளார்கள்.

இந்த மின்சார மாபியா எப்படி உருவானது எனத் தேடிய போது கிடைத்த விடயங்கள் இவைதான் . சாதாரணமாக அக்டோபர் - நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நீர் நிலைகளின் தண்ணீர் அளவு மேலோங்கியிருக்கும். இந்த நீர் தேங்கும் அளவை அதன் ஒரு மட்டத்துக்கு மேலே எழும்போது விஞ்ஞான ரீதியாக குறைக்க வேண்டியுள்ளது. ஆனால் இவர்கள் திருட்டுத் தனமாக எல்லோர் கண்களிலும் மண் தூவி விட்டு கேடு கெட்ட வேலையொன்றை செய்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒரு லீட்டர் தண்ணீரை வெளியேற்ற வேண்டி உள்ள போது 3 லீட்டர் தண்ணீரை வெளியேற்றுகிறார்கள். அது தெரிவதும் இல்லை. அதை யாரும் கண்டு கொள்வதும் இல்லை. அது குறித்து யாரும் தேடுவதும் இல்லை. இப்படி தேக்கி வைக்க முடிந்த நீரை வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியேற்றுகிறார்கள்.

இப்படி செய்யும் போது தற்போது போன்ற மழை இல்லாத காலத்தில், நீர்த் தேக்கங்களில் தண்ணீர் வற்ற ஆரம்பிக்கிறது. அதனால் இந்த மின் நிலையங்களை இயக்க போதுமான தண்ணீர் இல்லாது போய்விடுகிறது. அப்போதுதான் இந்த பவர் கட் பிரச்சனை ஆரம்பிக்கிறது.

இந்த நேரத்தில் மின்சாரத்தை வெளியில் இருந்து பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த இடத்தில்தான் கொமிசன் அடித்து மின்சாரத்தை வாங்கும் வியாபாரம் நடக்கிறது. 2013ம் வருடம் தொடக்கம் இன்றுவரை இருந்ததை விட ஒரு சதவீதம் கூட மின்சார உற்பத்தியை பெருக்க எந்தவொரு முயற்சியும் இவர்களால் எடுக்கப்படவே இல்லை. தேசிய மின்சார சபைக்காக , 1 மெகா வொட் மின்சாரத்தைக் கூட அதிகரிக்க இவர்கள் எவருமே எண்ணியதே இல்லை.

ரஞ்சித் சியம்பளபிட்டிய காலத்தில் 1 மெகா வோட் உற்பத்தி செய்யக் கூடிய 50 போர்டபிள் ஜெனரேட்டர்களை இறக்குமதி செய்தார்கள். அதனால் 50 மெகா வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. அவை மின்சார சபை பூமியில் உள்ள பிரதேசத்தில் கிடந்து மரங்கள் வளர்ந்து கெட்டுப் போன நிலையில் நாசமாகி கிடக்கின்றன. அதை செயல்படுத்த இந்த மாபியா குழு விடவில்லை. விடாது. இவை அனைத்தும் இவர்களோடு உள்ளே இருப்போர் தரும் தகவல்களே .



இவர்கள் யாரும் ஒற்றுமையாகம் இல்லை. ஆனால் திருடுவதற்கு மட்டும் ஒற்றுமையாக சேர்ந்து கொள்கிறார்கள். கிடைக்கும் கமிசனை பிரித்துக் கொள்ள மட்டுமே ஒற்றுமைப்படுகிறார்கள். ஏனைய நேரங்களில் ஒன்றாக ஒரு தேனீர் கூட ஒன்றாக அருந்துவதில்லை. அப்படியான ஒரு மாபியா கூட்டம் இது.

இதில் மின்சார சபையில் உள்ள வாகனங்களின் காப்புறுதி சரியாக இருக்க வேண்டும். அதில் பணம் சேமிக்க 3ம் நிலை காப்புறுதிகளையே எடுத்துள்ளார்கள். அவசரத்தில் போய் வாகனம் சேதமானால் டிரைவர் தனது சம்பளத்தில் வாகனத்தை திருத்திக் கொடுக்க வேண்டும். இப்படித்தான் செலவுகளை குறைக்கிறார்களாம். ஆனால் திருட்டுகள் உள்ளே இதைவிட நடக்கிறது.

மின்சார சபைக்குள் உள்ள சிலர் எம்மோடு பேசிய போது இதைவிட குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை மக்களுக்கு கொடுக்க முடியும் என்கிறார்கள். ஆனால் இவர்கள் விட மாட்டார்கள். அது முடியாத காரியம் என்கிறார்கள்.