தனிமையில் இருந்த 4 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 10, 2019

தனிமையில் இருந்த 4 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்!

நான்கு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தனமல்வில – கிதுல்கோட்டை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த நான்கு வயதான சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரை தனமல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெலுல்ல பகுதியை சேர்ந்த 44 வயதான திருமாண நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிறுவனின் பெற்றோர் பொலிஸாருக்கு விடுத்த தகவலை அடுத்து சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் சிறுவனின் தாத்தாவுடன் பணிபுரிவதால் சம்பள பணத்தை பெற்றுக்கொள்வதற்காக நேற்று முன்தினம் குறித்த வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த வீட்டில் சிறுவன் மாத்திரம் தங்கியிருந்தார்.இதனை அறிந்துக் கொண்டு சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வெல்வாய நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.குறித்த சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.