வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இப்படியுமா? வெளியான திடுக்கிடும் காட்சிகள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 3, 2019

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இப்படியுமா? வெளியான திடுக்கிடும் காட்சிகள்

வடமாகாணசபை ஆளுநர் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அரச அதிகாரிகளின் முகம் சுழிக்கும் நடவடிக்கைகளால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது தமது சேவையைப் பெற்றுக்கொள்ள பெருமளவான பொதுமக்கள் அலுவலகத்தை நோக்கி வந்திருந்த நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அரச அதிகாரிகளின் நடவடிக்கை தம்மை கவலைக்குட்படுத்துவதாக விசனம் ளெியிட்டுள்ளனர்.

தமது கருத்துக்களை பொதுமக்கள் வெளிப்படுத்தும் போது அங்குள்ள ஒரு அரச அதிகாரி பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்காமல் தொலைபேசியில் உரையாடிய வண்ணம் இருந்துள்ளார்.

அத்துடன், இரு அதிகாரிகள் தேநீர் அருந்துவதிலும், கடலை சாப்பிடுவதிலும் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை வீணே செலவழித்துள்ளனர், இது அங்கிருந்த பலரை முகம்சுழிக்க வைத்துள்ளது.

மேலும், அங்கு பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட கோவைகள் முறையாக பேணப்படாமல் குப்பைப்போல் கிடப்பில் போடப்பட்டுள்ளன, உண்மையில் இனி இந்த கோப்புக்களில் உள்ளவை நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது இதுபோலவே குப்பைக்கோ அல்லது கிடப்பிலோ போடப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

வடக்கு மக்களுக்கு பூரண சேவைகளை வழங்குவேன் என உறுதிமொழி எடுத்துள்ள வடக்கின் ஆளுநர் சுரேன் ராகவன் தனது அலுவலக அதிகாரிகளைக்கூட சரியாக வழிநடத்தமுடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

மேலும், இதுபோன்ற அரச அதிகாரிகளின் அநாகரிகமான நடவடிக்கைகளை ஆளுநர் கவனத்திற்கொள்வாரா? நடவடிக்கை எடுப்பாரா என்பதே சமகால கேள்வி உள்ளது.மேலும் அரசு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையில் நல்ல உறவி இல்லை என்பது உண்மையாகும்.அரசு அதிகாரிகள் மக்களுக்கு உதவாமல் பலர் இந்த மாதிரி செயலில் ஈடுபடுகின்றனர் என மக்கள் கவலையாக தெரிவித்தனர்.