துபாயில் மாகந்துரே மதூசுடன் கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வென்க்ரோயன் உள்ளிட்ட ஐவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், அவர்களை குற்றத்தடுப்புப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.
மாகந்துரே மதூஷூடன் கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர், இதுவரை நாட்டிற்கு திருப்பியனுப்பட்டுள்ளனர்.
இவர்களில் மூவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.