மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் : சந்தேகநபரின் மனைவி வாக்குமூலம்! பல திடுக்கிடும் தகவல்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, April 3, 2019

மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் : சந்தேகநபரின் மனைவி வாக்குமூலம்! பல திடுக்கிடும் தகவல்கள்

முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபராக லெப்டினன் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாரச்சி இருந்த போது, அவர் கடற்படை தலைமையகத்தில் மறைந்திருக்க உதவியமை தொடர்பில் மேலும் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுபி பிரிவு கோட்டை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

முன்னாள் லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சியின் மனைவி மற்றும் ஆசை நாயகி ஆகியோரிடம் பெற்ற வாக்கு மூலங்கள், தொலைபேசி பகுப்பாய்வு, ஸ்தல பரிசோதனைகளை மையப்படுத்தி இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாக, குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவின் சமூக கொள்ளை தொடர்பான விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா இதனை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்தார்.

முன்னாள் லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி மறைந்த்திருக்க உதவியமைக்காக அட்மிரல் ரவீந்திர உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு இன்று கோட்டை நீதிவான் முன் விசாரணைக்கு வந்தது. இதன்போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.

இதன்போது பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிமன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இந்த ஒரு மாத காலத்தில் ஹெட்டி ஆராச்சி பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்தை மையப்படுத்தி நாம் முதலில் விசாரித்தோம். இதன்போது அவர் அந்த மாதம் அதிகமாக பேசிய பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளிப்பட்டது.

அந்த பெண் ஸ்ரீயானி ஜெயசிங்க என்பவராவார். அவர் தொலைபேசி வாயிலாக ஹெட்டி ஆராச்சியுடன் தொடர்பை பேணி வந்த ஒரு பெண். அப்பெண்ணை சந்த்திக்கவும் ஹெட்டி ஆராச்சி முயன்றுள்ளார்.

எனினும் அட்மிரல் ரவீந்திர அப்போது, ஹெட்டி ஆராச்சியை தலைமையகத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கவில்லையாம். அதனால் ஆசை நாயகி கடற்படை தலைமையகத்துக்கேயே சென்று ஹெட்டி ஆராச்சியை சந்த்தித்துள்ளார். அவர்கள் சந்த்தித்துக்கொண்ட இடம் உள்ளிட்டவற்றை நம் சென்று பார்வையிட்டு புகைப்படமெடுத்துள்ளோம்.