பிரித்தானியாவில் புயல் பாதிப்பு: 1000 வீடுகள் இருளில் மூழ்கின! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 27, 2019

பிரித்தானியாவில் புயல் பாதிப்பு: 1000 வீடுகள் இருளில் மூழ்கின!இன்று காலை, மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் ஹானா புயல் பிரித்தானியாவை புரட்டி எடுத்ததையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

நேற்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அயர்லாந்து நோக்கி படையெடுத்த புயலால் 20,000 வீடுகள் இருளில் மூழ்கின.

தற்போது பலத்த காற்று பிரித்தானியா முழுவதும் வீசி வருவதையடுத்து மின்சாரம் தடைபட்டுள்ளதால் 1000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.


மின் விநியோக அலுவலகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தென் வேல்ஸ் பெரிய அளவில் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பகல் முழுவதும் பலத்த காற்றும் மழையும் தொடரும் என்றும் மாலையில் அது குறையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்க நடவடிக்கைகள் எடுக்க கூடுதல் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.