இலங்கையில் பயிற்சி பெற்றுக் கொண்ட தற்கொலை குண்டுதாரிகள் பதுக்கியிருப்பதாக தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 23, 2019

இலங்கையில் பயிற்சி பெற்றுக் கொண்ட தற்கொலை குண்டுதாரிகள் பதுக்கியிருப்பதாக தகவல்

இலங்கையில் பயிற்சி பெற்றுக்கொண்ட 160 தீவிரவாதிகள் உள்ளதாகவும் அதில் தற்கொலை குண்டுதாரிகளும் உள்ளடங்குவதாகவும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பயிற்சி பெற்றுக் கொண்ட 160 தீவிரவாதிகள் உள்ளதாக பாதுகாப்புப் பேரவைக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் விசாரணைகள் மிகவும் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீவிரவாத பயிற்சி பெற்றுக் கொண்டவர்களில் குறிப்பிடத்தக்களவானவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீவிரவாதிகளை கைது செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு, காவல்துறை திணைக்களம் மற்றும் அரசாங்கத்தினால் உரிய ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வனாத்தவில்லு பிரதேசத்தில் 75 ஏக்கர் தென்னந்தோப்பில் தௌபீக் ஜமாத் தீவிரவாத முகாம் முற்றுகையிட்டப்பட்ட போது இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த முகாமில் ஆயுத பயிற்சி, தற்கொலைக் குண்டுத்தாக்குதல் பயிற்சி போன்றன வழங்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் குண்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும், முகாமிற்கு அடிக்கடி இந்த தீவிரவாத இயக்கத்தின் தலைவராக கருதப்படும் சஜஹான் ஹஷீம் என்பவர் வந்து போயுளள்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயிற்சி பெற்றுக்கொண்ட 160 தீவிரவாதிகளின் பட்டியல் ஒன்றும் அவர்களின் செல்லிடப்பேசி விபரங்களும் திரட்டப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.