மதுரை மாவட்டத்தில் பல்வேறு கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்த பெண், 5-வது நாளில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த ராஜலட்சுமி (24) - வீரபாண்டி (27) ஆகிய இருவருக்கும் கடந்த 10-ஆம் திகதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.
திருமணமான நாளில் இருந்து கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் திருமணமான 5 வது நாளில் தோட்டத்திற்கு அருகில் விஷ மருந்து குடித்து ராஜலட்சுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மகளின் நிலை கண்டு கதறிய பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜலட்சுமி பரிதாபமாக இறந்துபோனார்.
தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக ராஜலட்சுமியின் தந்தை ஒய்யப்பன், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரிலும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.