யாழ் இந்துக் கல்லூரி “காவாலி” மாணவ முதல்வர்கள் பாடசாலை சொத்துக்களை அடித்து நொறுக்கி அட்டகாசம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 7, 2019

யாழ் இந்துக் கல்லூரி “காவாலி” மாணவ முதல்வர்கள் பாடசாலை சொத்துக்களை அடித்து நொறுக்கி அட்டகாசம்!


யாழ் இந்துக்கல்லூரியை சேர்ந்த 2019ம் ஆண்டு உயர்தர பிரிவை சேர்ந்த மாணவ முதல்வர்கள் பாடசாலையின் கற்றல் உபகரணங்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கி தங்களின் ஆணுறுப்பை சக மாணவர்களிற்கு கட்டியுள்ளனர் இதனை சக மாணவர்கள் காணாளிப்படுத்தி “TikTok” டிக்டொக் செயலியில் பதிவேற்றியுள்ள சம்பவம் யாழ் கல்விச் சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.
 
யாழ்ப்பாணம் உட்பட போரால் பாதிக்கப்பட்டு மரங்களிற்கு கீழும் தறப்பாள் கொட்டகைக்குள் பாடசாலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்க இவ்வாறான மாணவர்கள் தமக்கு இருக்கின்ற வசதிகளையே தமது சிற்றின்பத்திற்காக அடித்து நொறுக்குவது தமிழர் தேசத்தின எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்தான ஒரு விடயமாகும்.


பலமாவீரர்களை இந்த மண்ணுக்காக உகந்த ஒரு பாடசாலையில் இவ்வாறான சம்பவம் நடந்தேறியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
 
இவ்வாறு சமூகம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ எந்தவித சிந்தனையுமற்ற ஒரு மாணவ சமுதாயத்தை வளர்த்தெடுத்தது பெற்றோரின் தவறா அல்லது பாடசாலை சமூகத்தின் தவறா என்பதே ஒரு பெரும் கேள்வியாகும்.

பேரினவாத அரசுகள் திட்டமிட்ட வகையில் எமது கல்வியை அழித்து வர நாமே நம் தலைமீதே சேறள்ளிப்போடுவது போலானது இவ்வாறன செயற்பாடுகள்.சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒருவனால் மட்டுமே ஒரு சிறந்த சமூகப்பிரஜை ஆகமுடியும்.