யாழ் நகரை அண்டிய பகுதியில் இரகசியமானமுறையில் நடைபெறும் விபச்சாரம்..!! பின்னையில் யாழ்-கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 7, 2019

யாழ் நகரை அண்டிய பகுதியில் இரகசியமானமுறையில் நடைபெறும் விபச்சாரம்..!! பின்னையில் யாழ்-கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள்!

யாழ் பண்ணை கடற்கரையில் பலதடவைகள் சமூக ஆர்வலர்கள் அங்கு நடைபெறும் சமூக சீர்கேடுகள் பற்றி சுட்டிக்காட்டியும் எதுவித நடவடிக்கையும் உரிய அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை


ஆனால் பொலிஸாரின் தீவிர நடவடிக்கையால் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை என்பன பண்ணை கடற்கரையை அண்டிய பகுதியில் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது

தற்சமயம் பண்ணை கடற்கரையில் விபச்சாரம் இரகசியமான முறையில் இடம்பெற்றாலும்

யாழ்-கொழும்பு பஸ் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் கொழும்பில் இருந்து விபச்சாரத்திற்கு பெண்களை அழைத்து வருவதும் யாழ்ப்பாணத்தில் உள்ள தரகர்கள் யாழ் நகரை அண்டிய பகுதியில் வீட்டினை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் பெண்களை வீட்டு பணிப்பெண் என்ற போர்வையில் அவர்களின் வீட்டில் தங்க வைத்து எவ்வித தடையும் இன்றி விபச்சார நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.

போதைப் பொருளால் பாதிக்கப்பட்ட எமது யாழ் சமூகம் தற்போது விபச்சாரம் என்னும் சீர்கேட்டினை எதிர்கொள்ள போகின்றது .