கடந்த 19ஆம் திகதியன்று மீரிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைகள் வர்த்தக நிலையமொன்றில் வௌ்ளை பாவாடை, சட்டைகள் பத்தை கொள்வனவு செய்ய, புர்கா அணிந்து வந்திருந்த பெண்கள் மூவரையும் மற்றும் அவர்களுடன் வந்திருந்த வாகன சாரதியையும் அடையாளங் கண்டு கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோருகின்றனர்.
குறித்த சந்தேகநபர்கள் எதிர்வரும் வெசாக் மற்றும் பொசோன் போயா தினத்தில் மக்கள் நடமாடும் இடங்களில் கலந்துகொண்டு ஏதேனும் விரோத செயல்களில் ஈடுபடலாமென, பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஆகையால் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறியவருமாயின், உடனடியாக பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைத்து தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.