கந்தளாய் மற்றும் குச்சவெளி பொலிஸ் பிரிவுகளில் 12 பேர் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 29, 2019

கந்தளாய் மற்றும் குச்சவெளி பொலிஸ் பிரிவுகளில் 12 பேர் கைது

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் மற்றும் குச்சவெளி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது இன்று 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சுற்றிவளைப்பின் போது குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்து சந்தேக நபர்களும் அதாவது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத நிலையில் ஐந்து சந்தேகநபர்களும், கந்தளாய் பொலிஸ் பிரிவில் வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனடிப்படையில் கஞ்சா போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்களும், வால் ஒன்றினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவரும், வெளிநாட்டு சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நபரொருவரும், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்திற்கு செல்லாமல் தலைமறைவாகியிருந்த சந்தேக நபரொருவரையும்- கந்தளாய் நகர் பகுதியில் கடையொன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் சிடி ஒன்றினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரொருவரையும் மொத்தமாக ஏழு பேரை கைது செய்துள்ளதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேக நபர்கள் 7 பேரையும் கந்தளாய் நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்