தமிழீழ தேசமெங்கும் மீண்டும் திறக்கின்றன சோதனைச்சாவடிகள் அச்சத்தில் மக்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 24, 2019

தமிழீழ தேசமெங்கும் மீண்டும் திறக்கின்றன சோதனைச்சாவடிகள் அச்சத்தில் மக்கள்!

இன்று இலங்கை பாராளுமன்றத்தில் அவசரகால சட்டவரைபு வாக்கெடுப்பின்ற நிறைவேற்றப்பட்டத்தை அடுத்து தமிழீழ தாயக பிரதேசமெங்கும் மீண்டும் சோதனைச்சாவடிகளும் வீதி சோதனைகளும் ஆரம்பித்திருக்கின்றன.

குறிப்பாக இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தின் வன்னிக்கட்டளைப்பீடத்தில் இருந்து 52 அதிகாரகளும் 970 இராணுவத்தினரும் இந்த நடவடிக்கைக்காக களமிறக்கபடுகின்றனர்.

அதே போல் யாழ்ப்பான இராணுவக் கட்டளைபீடத்தில் இருந்து 28 அதிகாரிகளும் 454 படையினரும் களமிறங்குகின்றனர்.

மற்றும் கிளிநொச்சி கட்டளைபீடத்தில் இருந்து 10 அதிகாரிகளும் 491 படையினரும் தென்தமிழீழ இலங்கை இராணுவ கட்டளைபீடத்தில் இருந்து 45 அதிகாரிகளும் 1136 படையினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

குறிப்பாக புதிதாக காவலரண்களையும் வீதித்தடைகளையும் உருவாக்குவதற்கும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆகவே இவற்றின் மூலம் அப்பாவித் தமிழ் மக்களையும் முன்னாள் போராளிகளையும் இலங்கை பேரினவாத அரசாங்கம் இலக்கு வைக்க கூடும் ஆகவே மக்கள் அவதானமாக இருக்கவும்.

அதே வேளை தாயகம் செல்லவிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் அவற்றை தவிர்ப்பது சிறந்தாக இருக்குமெனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.