சீயோன் தேவாலய தாக்குதல்! சந்தேகநபர் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 24, 2019

சீயோன் தேவாலய தாக்குதல்! சந்தேகநபர் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட இலங்கையின் எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் சீயோன் தேவாலயத்தினல் தாக்குதல் நடத்த வந்த நபரை தேவாலய நிர்வாகத்தினர் சந்தேகம் கொண்டு வெளியில் அனுப்ப முயற்சித்த போது சந்தேகநபர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் மேலும்,

தேவாலயத்திற்குள் நுழைய முற்பட்டவரை தேவாலய ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றிய நிலையில் மீண்டும் அவர் தேவாலயத்திற்குள் நுழைய முற்பட்டார்.

இந்த நிலையில் அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவதம் செய்து கொண்டிருக்கும்போதே சந்தேகநபர் குண்டை வெடிக்க செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை சந்தேகநபர் மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தினை இலக்கு வைத்தே வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல் நடந்த குறித்த தினமன்று காலை மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தின் முன்பாக நின்ற இளைஞர்களிடம் ஆராதனை எப்போது ஆரம்பமாகும் என சந்தேகநபர் கேட்டதாகவும், வழிபாடுகள் முடிந்துவிட்டது என அவர் கூறியதால் அவர் அங்கிருந்து சென்றதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.