மார்பகங்களை அழகு படுத்தும் அறுவை சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்பதற்காக மகளை வயதான பணக்காரர்களுக்கு இரையாக்கிய தாய்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 9, 2019

மார்பகங்களை அழகு படுத்தும் அறுவை சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்பதற்காக மகளை வயதான பணக்காரர்களுக்கு இரையாக்கிய தாய்!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போது, அழகு படுத்தும் அறுவை சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்பதற்காக மகளை வயதான பணக்காரர்களுக்கு இரையாக்கிய ஒரு தாயை வெளுத்து வாங்கினார் நிகழ்ச்சியை வழங்கியவர்!

Kayla Morris (23) மற்றும் அவரது தாயான Georgina Clarke (41) இருவரும் சினிமா பிரபலங்களைப்போல அழகாக காட்சியளிக்க வேண்டும் என்ற அதீத விருப்பம் கொண்டவர்கள்.

அதற்காக அவர்கள் செலவிட்ட தொகை 60,000 பவுண்டுகள். ஆனால் சிகிச்சைக்கு பணம் வேண்டுமே, அதற்கு என்ன செய்வது.


தான் ஒரு தொலைக்காட்சி பிரபலம் போல தனது மார்பகங்களை பெரிதாகிக் கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார் Kayla.

தானும் தன்னை அழகுபடுத்திக் கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார் அவரது தாய் Georgina.இது நடந்தது Kayla 18 வயதாக இருக்கும்போது. மேற்கத்திய நாடுகளில் வயதான ஆண்களின் பாலியல் ஆசைகளை நிறைவேற்றும் இளம்பெண்களின் பணத்தேவைகளை அந்த ஆண்கள் நிறைவேற்றும் ஒரு மோசமான நாகரீகம் பரவி வருகிறது.


எனவே தன் மகளையும் வயதான மனிதர்களுடன் பாலுறவு கொண்டு அதிலிருந்து கிடைக்கும் பணத்தை தங்கள் இருவரின் அழகியல் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆலோசனை கூறியிருக்கிறார் Georgina.

இருவரையும் பேட்டி எடுத்த பிரபலம், எப்படிப்பட்ட ஒரு தாய் அழகியல் சிகிச்சைக்காக தனது 18 வயது மகளை வயதான மனிதர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள அனுமதிப்பாள்? என முகத்துக்கு நேராக கேட்க, இப்போது மோசமாக உணருகிறேன் என்று கூறுகிறார் Georgina.


முன்பொருமுறை பேட்டி ஒன்றில், தனது மகள் தனக்காக பாலுறவு கொள்வதைக் குறித்தும், அழகான மார்பகங்களை பெற விரும்புவதாக தன்னிடம் கூறியதையும் குறித்து பெருமையாக கருதுவதாக Georgina கூறியிருந்தார்.

ஆனால் தற்போதைய பேட்டியில் தான் சாதாரணமாக இருப்பதையே விரும்புவதாகவும் அழகியல் சிகிச்சைகளை வெறுத்து விட்டதாகவும் Kayla தெரிவித்துள்ளார்.