பள்ளி வகுப்பறையில் தூக்கில் சடலமாக கிடந்த இளம் ஆசிரியர்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 9, 2019

பள்ளி வகுப்பறையில் தூக்கில் சடலமாக கிடந்த இளம் ஆசிரியர்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் தனியார் பள்ளியின் வகுப்பறையில் இளம் வயது ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலாங்கரையில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ள நிலையில் இன்று வழக்கம் போல மாணவர்கள் வந்த போது எட்டாம் வகுப்பறையில் ஆசிரியர் அந்தோணி ஜெனிபர் என்பவர் தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் பின்னர் பொலிசாருக்கு தகவல் சொல்லப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

அந்தோணி தூக்கில் தொங்கிய வகுப்பறையின் தரையில் ரத்தத்துளிகள் சிதறிக்கிடந்த நிலையில் அவர் உடலில் எந்த காயங்களும் இல்லை என தெரியவந்தது.

பொலிசார் கூறுகையில், திருமணமாகாத அந்தோணி 8-ம் வகுப்பு, 9- ம் வகுப்புக்கு பாடம் நடத்திவந்தார், அவர் 8ஆம் வகுப்பறையில் தான் தங்கியிருந்தார்.

உடலில் காயங்கள் இல்லாத சமயத்தில் எப்படி ரத்தத் துளிகள் அங்கு சிதறிக்கிடக்கின்றன என்று விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் அந்தோணிக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்