யாழில் ஒரு மாணவியை காதலித்த இரு காவாலி மாணவர்கள் சாராயம் குடித்து வாள் வெட்டில் ஈடுபட்ட கொடூரம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 14, 2019

யாழில் ஒரு மாணவியை காதலித்த இரு காவாலி மாணவர்கள் சாராயம் குடித்து வாள் வெட்டில் ஈடுபட்ட கொடூரம்!

மதுபானம் அருந்திய போது மாணவி ஒருவரை இரு பாடசாலை மாணவர்கள் காதலித்தால் இரு மாணவர்களின் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவர் ஒருவர் வெட்டுக் காயத்துகு சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு வைத்தியசாலையில்சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு வந்த கும்பல் ஒன்று மாணவருடன் வைத்தியசாலைக்குச்சென்றவர்களை தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.


வரணி இயற்றாளையில் இன்று மாலை 5.30 மணியளவில் மாணவன் தாக்கப்பட்டார். வைத்தியசாலைக்குள் இன்றிரவு 7 மணியளவில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது


சம்பவத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் நந்தகுமார்பாருகன்(வயது-19) என்ற மாணவனே வெட்டுக்காயத்துக்குள்ளாகிய நிலையில் சாவகச்சேரி
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.