தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு மாணவியொருவர் தனக்குதானே தீ வைத்துக் கொண்டார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் பகுதியில் இந்த சம்பவம் இன்று (13) இடம்பெற்றது.
18 வயதான மாணவியொருவரே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ மூட்டிக் கொண்டார். உடனடியாகஉறவினர்கள் அவரை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஅனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். சிறுமியின் உடலில் 80 வீதமான எரிகாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நவிண்டில்- கொற்றாவத்தை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூவர் இவ்வாறுதனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்துள்ளனர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தபகுதியில் அடுத்தடுத்து தீயில் எரியும் சம்பவம் இடம்பெறுவது கிராம மக்களை அதிர்ச்சியடைய
வைத்துள்ளத