பத்து வருடங்களின் பின் முள்ளிவாய்க்காலில் இன்று வெடித்துச் சிதறிய வெடிகுண்டுகள்…அச்சத்தில் மக்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 6, 2019

பத்து வருடங்களின் பின் முள்ளிவாய்க்காலில் இன்று வெடித்துச் சிதறிய வெடிகுண்டுகள்…அச்சத்தில் மக்கள்

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் வயலுக்கு தீ மூட்டியதால் நிலத்தில் மறைந்திருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியுள்ளன.

10 வருடங்களாக கைவிடப்பட்டிருந்த தனிநபர் ஒருவருடைய 2 ஏக்கர் வயல் நிலக் காணி உரிமையாளரினால் இன்று சீராக்கி தீ மூட்டப்பட்டுள்ளது. இதன்போது காணி நிலத்தில் மறைந்திருந்த குண்டுகள் சில வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தம் நிகழ்ந்த பகுதி என்பதினால் காணி உரிமையாளரும், வேலையாட்களும் பற்றைகளுக்கு தீ மூட்டிய பின்னர், அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றிருந்தனர்.

இதனால், தெய்வாதீனமாக அவ்விருவரும் உயிர்த்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இறுதியுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் அபாயகரமான வெடிபொருட்கள் இன்னமும் முற்றுமுழுதாக அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.