பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை அரசின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 30, 2019

பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை அரசின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை!

பயங்கரவாதத்தை போற்றும் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்ற அல்லது ஆதரிக்கின்ற எந்தவொரு மதவாத தீவிரவாத அன்றேல் கடும்போக்குவாத சித்தாந்தங்களை போதிப்பதை தடை செய்யும் வகையில் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வர்த்தமானியில் ஒருவரின் அடையாளத்தை மறைக்கும் உடையோ அல்லது வேறு எந்த பொருளையோ அணிந்து பொது இடத்தில் செல்ல முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.