ஒரு வாரம் மூச்சின்றி இருந்த ஹிஸ்புல்லா! இன்று பதறக் காரணம்! பயமா? பதற்றமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 30, 2019

ஒரு வாரம் மூச்சின்றி இருந்த ஹிஸ்புல்லா! இன்று பதறக் காரணம்! பயமா? பதற்றமா?

காத்தான்குடிக்குள் படையினர் செல்லும் வரைக்கும் வாய் மூடி எந்தவொரு அறிவித்தலும் விடாது மௌனம் காத்த கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா இன்றைய தினம் திடீரென காத்தான்குடிக்குள் படையினர் சென்ற பின்னர் அறிக்கை விடுவது விநோதமாக இருக்கின்றது.

இப்படியான சம்பவம் காத்தான்குடியில் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஞானமுத்து சிறீநேசன் மற்றும் சீனித்தம்பி யோகேஸ்வரன் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்து வந்தனர்.

அத்துடன் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு காத்தான்குடியில் மையம் கொண்டுள்ள ஆளுநருடன் தொடர்பை பேணி வருகின்றது என்பதை கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தனர்.

அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இன்று வரை எந்தவொரு கருத்துக்களையும் தெரிவிக்காது இருந்துவிட்டு காத்தான்குடியில் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு பல்வேறு பொருட்களை கைப்பற்றியதுடன் பலரை கைது செய்துள்ள இந்த சமயத்தில் ஹிஸ்புல்லா அறிக்கை விடுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

ஒருவேளை ஹிஸ்புல்லா நினைத்திருக்கலாம் காத்தான்குடியில் இப்படி விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடத்தமாட்டார்கள் என்று.

படையினரும், காத்தான்குடியில் பாரிய அரசியல் தலையீடு இருப்பதன் காரணத்தினால் ஒரு திரிசங்கு நிலையிலேயே இருந்தனர், எனினும் தமது அதிகாரத்தை பயன்படுத்தி இறுதியில் காத்தான்குடிக்குள் தமது தேடுதல் வேட்டையை படையினர் ஆரம்பித்தனர்.

உண்மையில் தற்போது ஹிஸ்புல்லா கூறலாம் இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதன் காரணமா எதுவித அறிக்கையையும் தான் விடவில்லை என்று, ஆனால் எழுத்து மூலமான அறிவிக்கையைக்கூட அவர் இன்றுதான் வழங்கியுள்ளார்.

அவர் தனக்கு ஏதும் ஆபத்து ஏற்படும் என எண்ணியிருக்கலாம். தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் ஹிஸ்புல்லா தொடர்பு பேணினார் என நாடாளுமன்றத்தில் ஆதாரத்துடன் சுமந்திரன் குற்றச்சாட்டுக்களை அடுக்கிச் சென்றார்.


ஆனாலும் ஹிஸ்புல்லா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்படியானால், முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் இதே போன்ற ஒரு சூழ்நிலையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேனினார் என ஆதாரமின்றி கைது செய்யப்பட்டதை எவ்வாறு கூறுவது.

இந்நிலையில் ஹிஸ்புல்லா விடயத்தில் என்ன செய்யப்போகின்றது அரசு, எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகின்றது. அரசு பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.



அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தம்பி உண்மையாகவே கைது செய்யப்பட்டார். எனினும் பின்னர் எழுந்த அரசியல் அழுத்தம் தலையீடு காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஒட்டுமொத்தத்தில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் அனைவரும் வெளியில் சுதந்திரமாக இருக்க அரசு அனுமதித்திருப்பது வேடிக்கையும் வினோதமும் சிறுபிள்ளை அரசியலையும் காட்டுகின்றது.



தனக்கு ஏற்பட்ட பதற்றம், பயம், பீதி காரணமாக அவர் கல்முனைக்கு வரவில்லை, இதற்கான காரணங்கள் யார் தேடுவது.

விசேட புலனாய்வு கட்டமைப்பு பொலிஸாரைக்கடந்து விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், அடுத்து என்ன நடக்கும்?

இதற்கான பதில்கள் யாரிடம் இருந்து கிடைக்கும்?


சாதாரண முஸ்லிம் மக்களிடம் தீவிரவாதத்தை விதைத்ததில் முக்கிய பங்கு சில முஸ்லீம் அரசியல் தலைவர்களைச் சாரம் ஆயுதம் தூக்குவோம் இரத்த ஆறு ஓடவைப்போம் என்று பாராளுமன்றத்திலே பேசி நாம் இதற்குமேலும் செய்யக்கூடியவர்கள் என்ற தைரியத்தை முஸ்லிம் இளைஞர்களிடம் வளர்த்து இந் நாட்டு சட்டங்களிற்கு கட்டுப்படதேவையில்லை என்பதை மறைமுகமாக உரைத்ததன் விளைவே இன்றைய இந்த அவலம்.

தன் இனத்தின் பிரதிநிதி தடையில்லாமல் நாட்டிற்கெதிராக பேசுகிறானென்றால் அவர்கள் அதை செய்து முடிக்க துடிப்பார்கள்.



இது இயற்கை உங்களுடைய அரசியலுக்கு மற்ற இனத்தையும் மற்ற மதத்தையும் உங்கள் மக்களுக்குள்ளே வெறுக்கப்பட வேண்டியதாக காட்டினீர்.

காளிகோவிலை இடித்தேன் அதில் மார்க்கட் கட்டினேன் நீதிபதியை மாற்றினேன் என்று மக்களிடம் உமது ஹீரோயிசத்தை காட்டமுனைந்து உமது மக்களோடு அனைத்து தொடர்புகளையும் வைத்துள்ள சகோதர இனத்தின்மீதான வன்மத்தை வளர்த்துவிட்டார்கள்.

இன்று உழைத்தால்தான் சோறு எனும் முஸ்லிம் வியாபாரி வீட்டில் அடுப்பை எரிப்பது நீரா இதற்கெல்லாம் நீரும் ஒரு காரணம்.

எப்படி இருந்தோம் அந்நாளில் இந்த நாட்டிற்கு எந்தத்தேவையுமற்ற அரபுக்கலாச்சாரத்தை கொண்டுவந்து தமிழரிடமிருந்து எட்டாத தூரத்திற்கு முஸ்லீம் சமூகத்தை பிரித்தெடுத்துச் சென்று விட்டீர்கள்.


இனி இரு இனங்களுக்குள்ளும் சுமூகமான நிலை தோன்றுமென்பது கனவு காத்தான்குடி படுகொலை உங்களுக்கு எப்படியோ இந்த மதவாதப்படு கொலை எமக்கும் அப்படியே..

இதற்கு தீவிர வாதிகள் பிரதான காரணம் அதற்கு அத்திபாரம் இட்டவர்கள் அரசியல் தலைவர்களான நீங்கள் இப்போது நிம்மதியா