கொழும்பில் பதற்றம்! அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு! சிறுவர்கள் உட்பட பலர் காயம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 20, 2019

கொழும்பில் பதற்றம்! அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு! சிறுவர்கள் உட்பட பலர் காயம்

வரலாற்று சிறப்புமிக்க கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினமான இன்று பெருமளவு அடியார்கள் கூடியிருந்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. குண்டொன்றே வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டியூடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

மேலும் தேவாலய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இன்று உயிர்த்த ஞாயிறு தினம் என்பதால் பெருந்திரளான மக்கள் தேவாலயத்திற்கு ஆராதனைக்காக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.