நாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 20, 2019

நாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்

கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து கொழும்பில் இரு நட்டத்திர ஹோட்டல்களிலும் இன்று காலை இரண்டு குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கொழும்பு சங்கரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடியிலும், சினமன் கிரேண்ட் ஹோட்டலிலும் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பு சம்பங்களினால் இதனால் வெளிநாட்டுப் பயணிகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் படுகயாமடைந்த பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு அருகிலும் மற்றுமோர் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக இதுவரை ஐந்து இடங்களில் இன்று காலை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.