கடுமையான வரட்சியான காலநிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்துடன் யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் நீர்வேலி உட்பட பல பிரதேசங்களுக்கு இந்த ஐஸ் மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 52 நாட்களின் பின்னரே இப்பிரதேசத்துக்கு மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றது.
தொடர்ந்தும் அப்பிரதேசத்துக்கு கடுமையான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடி, மின்னல் ஏற்படும் அபாயம் உள்ளதனால், இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது