யாரும் நுவரேலியாவுக்கு போகாதீர்கள்!! புலம்பெயர் தமிழர்களும் அவதானம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 7, 2019

யாரும் நுவரேலியாவுக்கு போகாதீர்கள்!! புலம்பெயர் தமிழர்களும் அவதானம்!

இலங்கையின் மலையகத்தின் குடிநீர் தொடர்பில் அதிர்ச்சி மர்மங்கள் தற்போது வெளிவந்துள்ளன. குறிப்பிட்ட சில வருடங்களுக்கு முன்னதாக ஜப்பான் நாட்டிற்கும் இலங்கை நாட்டிற்கு ஒப்பந்தம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதாவது ஜப்பான் நாட்டு அரசானது மலைப்பகுதிகளில் இருக்கின்ற தண்ணீரை செயற்கையான முறையில் உறிஞ்சி பயன்ப்படுத்தும் ஒரு செயற்பாட்டு திட்டத்தை தனது நாட்டில் பரிசோதனை செய்யாமல் இலங்கை அரசில் பரிசோதனை செய்ய திட்டமிட்டு அதற்கான உடன்படிக்கையினை மேற்க்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இலங்கையின் மலையக பகுதிகளில் இருக்கின்ற மலைபாங்கான இடங்களில் இந்த திட்டம் செயற்ப்படுத்தியும் வந்துள்ளது.

ஆனால் குறிப்பிட்ட வருடங்களில் இவ்வாறாக பெறப்படுகின்ற குடிநீரில் ஒருவகை அமிலம் இருப்பதாகவும், இதனால் இதனை நுகரும் மக்கள் மறைமுகமாக பல்வேறு நோய்களுக்கு உட்படுவதனையும் உணர்ந்து, இந்த திட்டத்தை தன் நாட்டில் ஜப்பான அரசு மேற்க்கொள்ளவில்லை..ஆனால் மலையகத்தில் இந்த திட்டம் இன்னும் அமுலில் இருக்கின்றது.

குறிப்பாக மலையப்பகுதிகளில் நகரசபைகள் இதனை திட்டமிட்டு குடிநீரை உறிஞ்சி அதனை நுவரெலியா போன்ற பிரதான நகரங்களில் இருக்கின்ற ஹோட்டல்களுக்கும் தங்குமிடங்களுக்கு பணத்திற்காக விநியோகித்து வருகின்றது.இவ்வாறாக செயற்கையான முறையில் தரைகீழ் நீரை உறிஞ்சி எடுப்பதனால் இதனை நுகரும் உல்லாச பிரயாணிகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பிரதேச சபைகளுக்கு உட்பட்ட மக்கள் குடிநீருக்காக மிகுந்த பற்றாக்குறையினை எதிர்நோக்குவதற்கு நகரசபையின் இவ்வாறான செயற்பாடே காரணமாக அமைந்துள்ளது.

ஆகவே நுவரெலியா நகரிற்கு பருவகாலங்களில் மிகுந்த ஆசையுடன் வரகின்ற உல்லாச பிரயாணிகள் தன்னையறியாமலே பல்வேறு நோய்களை வாங்கிக்கொள்கின்றார்கள் என்பதே பரிதாபமான செய்தி. ஆகவே இதனை நன்கு உணர்ந்து இலங்கை அரசாங்கமும், மத்திய மாகாண சபைகளும் முன்வந்து இயற்கையான முறையில் மாத்திரம் நீர் பெரும் செயற்த்திட்டங்களை கொண்டுவந்து அப்பாவி பொதுமக்களையும் உல்லாச பிரயாணிகளை பாதுக்குமாறு விஞ்ஞான ஆராச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மலைப்பகுதிகளில் செயற்கையாக நீர் உறிஞ்சப்படுவதனால் விவசாய நிலங்களுக்கும் நீர் இல்லாமல் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி விவசாயத்தை கைவிடும் அளவிற்கு பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஆகவே இவ்வாறான பொருப்பற்ற செயற்பாடுகளால் ஏற்படும் தோல் நோய்கள் மற்றும் சிறுநீரக பிரச்சினை என்பவற்றை எதிர்நோக்கி வரும் மலையக பிரதேசவாசிகளே தற்போது வெளிமாவட்டங்களிலிருந்து நுவரெலியாவிற்கு வருவோர் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

அப்பாவி மக்களை பாதுகாக்க உடனடியாக இந்த தகவலை பகிர வேண்டியது முக்கியமானதாகும்.