கிழக்கில் யுத்தம் முடிவுற்ற பின் தமிழரின் அபிவிருத்தி என்பது சாரய தவறணையும் அதனால் தினம் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகரிப்பாகும், ஆலயம் திறந்தால், மரணவீடு, பிறந்தநாள் வீடு, கல்யாண வீடு, வேலை கிடைத்தால், நண்பர்கள் சந்தித்தால் சாரயம் எனும் ரீதியில் பிரதான பங்கு வகிக்கின்றது.
தினம் ஒவ்வொரு நாளும் கூலி வேலை சென்ற தமிழ் ஆண்கள் ஏதாவது சாரய தவரணையில் ஒரு போத்தலை குடித்துவிட்டு போதையுடன் இன்னும் ஒரு போத்தலை இடுப்பில் வைத்துக்கொண்டு வீடு செல்லும் முன்பே ஏதாவது ஒரு வீதியில் செல்லும் தெரு நாய், கொங்கிறிட் தூண், பொதுமக்கள் மீது வாகனத்தை மோதி அவயம் இழந்து சிறுநீர் கழிக்க மனைவி, பிள்ளைகள் துணையுடன் அழைவது,
அல்லது மனைவிகள் பிள்ளைகள் குடிகார கணவன், தந்தையினால் பிரயோசனமில்லை என கருதி மத்திய கிழக்கு நாடு செல்லுதல், மாற்றினத்தவர் கடைகள் சென்று சீரழிகின்றார்கள், இதுதான் தினம் தினம் நடைபெறுகின்றது.
இப்பொழுது பண்டிகை நாட்களில் கிழக்கில் தமிழர் வசிக்கும் கிராமங்களில் போலிஸ் நிலையத்தின் முன்னால் முறைப்பாட்டிற்காக நடு இரவில் குடிகார கணவர்மார் சித்திரவதையால் பெண்கள் ஏக்கத்துடன் வெறுப்புடன் காத்திருப்பதும் சான்றாகும்.
இப்படியாக தமிழினத்தை சாரயமே அழிக்கின்றது. இன்று வாழைச்சேனை விநாயகபுரத்தில் இருசாராய குடிகார தமிழன் ஒன்றாக மூக்கு முட்ட குடித்து விட்டு பெற்றோலை ஊற்றி எரித்து கொலைசெய்து அவர் நிம்மதியாக போய்விட்டார். ஆனால் அவர் மனைவி, பிள்ளைகள் வேதனை யாரறிவார்? இதற்கு ஓர் முடிவு எப்போது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.