இலங்கையில் தமிழர் பகுதியில் சற்றுமுன் ஆண் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 1, 2019

இலங்கையில் தமிழர் பகுதியில் சற்றுமுன் ஆண் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் 58 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலர் முன்னிலையில் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு மற்றும் கைகலப்பின் காரணமாகவே இந்த அனர்த்தம் இன்று மாலை நிகழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

58 வயதான குறித்த நபர் அவ்வூரில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவராலேயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோயில் உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் சட்டத்தின் பிடியில் சிக்குவதற்கு கொலையுண்ட மனிதர் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் இந்த முன்பகையின் காரணமாகவே இந்த கொலையினை மேற்கொண்டதாகவும் பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவர் கூறுகின்றார்.

எவ்வாறாயினும் குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தற்பொழுது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது