ஐதராபாத் மாநிலத்தில் ஒன்றரை வருடங்களாக கணவனை விட்டு பிறந்து வாழ்ந்த மனைவி, விவகாரத்து கடிதத்தை பார்த்ததும் மனவிரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த மேகனா (30) என்பவர் டி.சி.எஸ்ஸில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2017ம் ஆண்டு வினய் குமார் (32) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த 6 மாதங்களிலே வினைக்குமார் மற்றும் அவருடைய பெற்றோர் வரதட்சணை கேட்டு மேகனாவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனால் கோபித்துக்கொண்ட மேகனா தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தங்கிய மேகனா, கணவரின் வீட்டிற்கு திரும்பவில்லை.
இந்த நிலையில் வினய்குமார் தன்னுடைய மனைவிக்கு விவாகரத்து கடிதம் அனுப்பியுள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மேகனா, மனவிரக்தியிலேயே இருந்துள்ளார்.
இருப்பினும், அடுத்த நாளன்று ஆவருடைய மாமியார் குடியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவரை வீட்டிற்குள் அனுமதிக்க வினய் குமார் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மேகனா கட்டிடத்தின் 9வது மாடிக்கு சென்று, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் மேகனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.