லண்டனில் கடந்த 15 மாதங்களில் நடந்த வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இதுவரை 100 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் லண்டன் மாநகரில் இதுவரை 99 வாள்வெட்டு படுகொலைகள் நடந்தேறியுள்ளதாக பொலிஸ் தரப்பு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் ஒவ்வொரு விசாரணைக்கும் தோராயமாக ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக செலவாகிறது என தெரியவந்துள்ளது.
லண்டனில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் ஊதியம் தோராயமாக 22,344 பவுண்டுகள் என்றால் சராசரி லண்டன் இளைஞரின் ஊதியமானது 20,282 என கூறப்படுகிறது.
வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் செலவிடப்பட்டுள்ள 100 மில்லியன் பவுண்டுகள் என்பது ஆண்டுக்கு சுமார் 4,475 பொலிசாருக்கு ஊதியமாக அளிக்கலாம்.
மட்டுமின்றி விசாரணைக்காக மில்லியன் கணக்கில் செலவிடும் தொகையை அதிக எண்ணிக்கையிலான பொலிசாரை பணிக்கு அமர்த்துவதிலும், பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றுவதாலும் குற்றங்களை அதிக அளவில் தடுக்க முடியும் என சமூக ஆர்வலகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர், இண்றைய சூழலில் சிக்கலில்லாத வழக்கு விசாரணைகளுக்கு சுமார் 500,000 பவுண்டுகள் வரை செலவாகலாம் என்றார்.