ஐ.நா. தீர்மானத்தின் அவசியம் குறித்து சம்பந்தன் விளக்கம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 6, 2019

ஐ.நா. தீர்மானத்தின் அவசியம் குறித்து சம்பந்தன் விளக்கம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்கான ஐ.நா. வின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே  ஐக்கிய நாடுகளின் உரிமைகள் பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இரா.சம்பந்தன் இதன்போது தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சில நாட்களுக்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவையும், ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.