தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து பொலிஸாரினால் வெளியிடப்பட்ட 6 பேர்கொண்ட தேடப்பட்டுவருவோர் பட்டியலில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதில் உயிரிழந்த இருவரும் கிழக்கில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்களில் குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 44 சந்தேகநபர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணையிலும் 15 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்