விஷ பாம்புக்கு தீவைத்தபோது பரிதாபமாக எரிந்துபோன 5 சிறுத்தை குட்டிகள்: பழிவாங்குமா தாய் சிறுத்தை? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 4, 2019

விஷ பாம்புக்கு தீவைத்தபோது பரிதாபமாக எரிந்துபோன 5 சிறுத்தை குட்டிகள்: பழிவாங்குமா தாய் சிறுத்தை?

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாம்புக்கு தீவைத்த போது 5 சிறுத்தை குட்டிகள் தீயில் கருகி இறந்துபோனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவ்சாரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சில கரும்பு அறுவடை செய்ய வந்தபோது விஷ பாம்பு ஊறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் சத்தம் வந்த இடத்தில் இருந்து கரும்பு தோட்டத்தில் தீவைத்துள்ளனர்.

இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. சிறிது நேரம் கழித்து அவர்கள் சென்றுபார்த்தபோது, அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

5 சிறுத்தை குட்டிகள் தீயில் கருகி இறந்துகிடந்தன. கரும்புதோட்டத்துக்குள் குட்டிகளை ஈன்ற சிறுத்தை வேட்டைக்கு சென்றுவிட்டது. அந்த சமயத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனால் வேட்டைக்கு சென்றிருந்த தாய் சிறுத்தை குட்டிகளை கொன்றவர்ளை பழிவாங்குமா என்ற அச்சத்தில் தீவைத்த விவசாயிகள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து அந்த வனத்துறை அதிகாரிகள்,குட்டிகளின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.