மாணவர்கள் கழிவறையில் தூக்கில் தொங்கிய மாணவி: அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 4, 2019

மாணவர்கள் கழிவறையில் தூக்கில் தொங்கிய மாணவி: அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்!

கடலூரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி, ஆண் மாணவர்களின் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரை சேர்ந்த ஏழுமலை (39) என்பவரின் இரண்டாவது மகள் துர்கா தேவி (13). இவர் அதேபகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

வீட்டின் அருகே பள்ளி இருந்ததால், தினமும் அதிகாலை பள்ளி திறக்கும் பொறுப்பு தேவிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 8.30 மணிக்கு வீட்டில் பெற்றோர்களிடம் கூறிவிட்டு தேவி கிளம்பியுள்ளார்.வழக்கம் போல பள்ளிக்கு வந்த சில மாணவர்கள் கழிவறையை திறந்துள்ளனர். அப்போது துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடியே தேவி கிடப்பதை பார்த்து அலறியுள்ளனர்.

இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த தலைமையாசிரியை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


இதற்கிடையில் பள்ளிக்கு விரைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தலைமையாசிரியரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.


இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மாணவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனை தடுக்கும் விதமாக பேச்சு வார்த்தை கூட நடத்தாமல் பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர்.

இதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 10 பேரை கைது செய்து பொலிஸார் சிறையில் வைத்துள்ளனர்