பிரித்தானியாவில் விசா கிடைக்காத கோபத்தில் மனைவியை 50 முறை கத்தியால் குத்தி எரித்த கணவன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 4, 2019

பிரித்தானியாவில் விசா கிடைக்காத கோபத்தில் மனைவியை 50 முறை கத்தியால் குத்தி எரித்த கணவன்!

பிரித்தானியாவில் புகலிக்கேரிக்கையாளர் ஒருவருக்கு தனது மனைவியை குத்திக்கொலை செய்த குற்றத்திற்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டை சேர்ந்த தனா அப்துல்லா என்பவருக்கும், பிரித்தானிய பெண்ணான நாஜ்மைதீன் என்ற பெண்மணிக்கும் திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.

பிரித்தானிய நாட்டில் புகலிடம் கோரி ஏற்கனவே விண்ணப்பம் அளித்திருந்த அப்துல்லாவின் விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது மனைவியின் உதவியிடன் அந்நாட்டில் விசா பெறுவதற்கு முயற்சித்துள்ளார்.

இதற்கிடையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்துள்ளார் நாஜ்மைதீன்.

இருப்பினும், பிரித்தானியாவில் தனது கணவருக்கு விசா பெறுவதற்கான விண்ண படிவத்தை ஆதரிக்க நாஜ்மைதீன் மறுத்துவிட்டார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி Fenton நகரில் உள்ள தனது மனைவியின் வீட்டுக்கு சென்று 50 முறை கத்தியால் குத்தியுள்ளார்.

அதன்பின்னர், சமையலறையில் வைத்து அவரது உடலை தீவைத்து எரித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை Stafford Crown நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறிய தனது மனைவியை அவமதிப்பு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு குறித்து நீதிபதி Michael Chambers கூறியதாவது, இது ஒரு திட்டமிட்ட கொலை, பிரித்தானிய நாட்டிற்குள் உங்கள் குடியேற்ற முறையீடு தோல்வியடைந்துள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நீங்கள், மிக கடுமையான குற்றத்தை செய்துள்ளீர்கள்.

மேலும், சாட்சியங்கள் உங்களுக்கு எதிராக இருந்த காரணத்தால் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து நாஜ்மைதீனி சகோதரி கூறியதாவது, அவளின் இழப்பு எங்கள் குடும்பத்தை மிகவும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அப்துல்லா எனது சகோதரியை மட்டும் கொலை செய்யவில்லை, அவளுடன் சேர்த்து எங்கள் குடும்பம் மற்றும் அவளது குழந்தைகளின் உணர்வுகளையும் கொலை செய்துவிட்டார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்த Staffordshire காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளார்