பொலிஸாரை கண்டதும் இளைஞன் செய்த செயல்...பின் இளைஞனுக்கு நேர்ந்த கதி!4 - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, April 28, 2019

பொலிஸாரை கண்டதும் இளைஞன் செய்த செயல்...பின் இளைஞனுக்கு நேர்ந்த கதி!4
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

நாவாந்மதுறையில் இன்று அதிகாலை முதல் படையினர் மற்றும் பொலிஸாரின் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே சந்தேகநபர் வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் வாளை குளத்துக்குள் வீச முற்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டுள்ளார். அதனால் சந்தேகநபர் அதனை கீழே போட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், வாளுடன் சந்தேகநபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.