கடைக்குள் பதுங்கியிருந்த ஐ.எஸ் அமைப்பின் பிரதான சூத்திரதாரிகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 28, 2019

கடைக்குள் பதுங்கியிருந்த ஐ.எஸ் அமைப்பின் பிரதான சூத்திரதாரிகள்!

தற்கொலை தாக்குதல் சந்தேகநபர்களான ஷாதிக் அப்துல் ஹக் (30), ஷாஹித் அப்துல் ஹக் (27) ஆகியோர் உட்பட சந்தேக நபர்கள் சென்ற வாகனத்தின் சாரதியும் நாவலப்பிட்டி பொலிஸாரினால் இன்று அதிகாலை கம்பளையில் கைதுசெய்யப்பட்டனர்

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நாவலப்பிட்டி நகரில் உள்ள பள்ளிவாசல், அரபு முஸ்லிம் பாடசாலை போன்ற இடங்களை சனிக்கிழமை இரவு நாவலப்பிட்டி பொலிஸார், இரானுவத்தினர், விஷேட அதிரடி படையினர் ஆகியோர் சோதனையிட்டனர். அப்போது சந்தேகமான முறையில் இருந்த வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு அதன் சாரதியை பொலிஸார் கைதுசெய்தனர்,

கைது செய்யபட்ட சாரதியிடம் விசாரனைகளை நடத்திய பொலிஸார், வாகனத்தில் பயணித்தவர்கள் யார் என்ற விசாரணைகளை மேற்கொண்டபோது, கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் தொடர்புடைய இருவர் கம்பளை பகுதியில் உள்ள பாதணி விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் தலைமறைவாகிள்ளதாகவும், இரண்டு சந்தேக நபர்களையும் தான் குறித்த வாகனத்தில் ஏற்றி வந்ததாகவும் இவர்கள் இரண்டு பேரும் சகோதரர்கள் எனவும் பொலிஸாருக்கு சாரதி வாக்குமுலம் வழங்கினார்.

சாரதியினால் வழங்கபட்ட வாக்குமுலத்தின்படி கம்பளை பகுதியில் உள்ள பாதணி விற்பனை நிலையத்தினை நாவலப்பிட்டி பொலிஸார்

சுற்றிவளைத்தனர். வர்த்தக நிலையம் மூடப்பட்டு இருந்தால், கதவை உடைத்து உள்ளே புகுந்த பொலிஸார் இரண்டு பிரதான சந்தேக

நபர்களையும் கைது செய்தனர்.

இவர்கள் சி ஐ டி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.