30 பேரின் உயிரைக் காப்பாற்றிவிட்டு தன்னுயிரை விட்ட தெரு நாய்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 13, 2019

30 பேரின் உயிரைக் காப்பாற்றிவிட்டு தன்னுயிரை விட்ட தெரு நாய்!

உத்தரபிரதேசத்தில் ‌தெரு நாய் ஒன்று தீ விபத்திலிருந்து‌ 30 பேரின் உயிரைக் காப்பாற்றியது. பின்னர் அந்த ஜீவன்‌ அதே தீயின் கோர தாக்கத்திற்கு இரையானது.

உத்தரபிரதேசத்தில் உள்ள பண்டா என்ற இடத்தில் நேற்றிரவு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. அப்போது அங்கிருந்த ஒரு‌ நாய் தீயைப் பார்த்து கு‌ரைக்கத் தொடங்கியது. அது இடைவிடாது குரைத்துக் கொண்டிருந்ததால், உறங்கிக் கொண்டிருந்தவர்கள் விழித்தனர். பின்னர் தங்களது குடியிருப்பில் தீப்பிடித்து எரிவதை தெரிந்து கொண்ட சுமார் 30‌ பேர் பத்திரமாக வெளியேறி தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.

ஆயினும் தீப்பிடித்து எரிந்த ஒரு‌ வீ‌ட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், அந்த நாய் உயிரிழந்தது. தங்களின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரைக் கொடுத்த அந்த வாயில்லா ஜீவ‌னி‌ன் பரிதாப நிலையை எண்ணி,‌ உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர் விட்டனர்