ரஜினிக்கு சுயஅறிவே இல்லை! சீமான்! - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, April 13, 2019

ரஜினிக்கு சுயஅறிவே இல்லை! சீமான்!

பாஜக தனது தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் என கூறியுள்ளது. இதனை வரவேற்று நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பேசியிருந்தார், இதற்க்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் கடுமையான வார்த்தைகளால் சாடியிருந்தார்.

"இங்கு சில முட்டாள்கள், மடையர்கள், நதிகளை இணைக்கப் போகிறோம், அதற்கு நாங்கள் திட்டங்கள் வகுக்கப் போகிறோம், பல கோடிகளை ஒதுக்குகிறோம் என்று பல 'இடியட்ஸ்' பேசிக்கொண்டு அலைகின்றனர். ஏரியை, குளத்தை என் தாத்தன் வெட்டினான். கம்மாயை என் பாட்டன், முப்பாட்டன் வெட்டினான். கிணறு, ஊருணியை வெட்டினான்.

ஆற்றை நாங்கள் உருவாக்கவில்லை. அது இயற்கையின் பெருங்கொடை. அருவி தானாக பாதை கண்டு ஓடியது. எங்கே மேடு, எங்கு பள்ளம், வளைவு, நெளிவு என அதுவே உருவாக்கியது ஆறு. அதை எப்படி இணைப்பீர்கள்?" என சீமான் கேள்வி எழுப்பினார்.